23 C
Sri Lanka
Saturday, June 14, 2025
HomeCinema Newsபத்ம பூஷன் விருது பெற்றார் அஜித்

பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித்

நடிகர்கள் அஜித், பாலகிருஷ்ணா, சேகர் கபூர் ஆகியோர் பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி கையால் பெற்றனர்.நமது நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்டது.

இதில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், நடிகை ஷோபனா ஆகியோருக்கும், தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா, ஹிந்தி நடிகர் சேகர் கபூர் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் டில்லியில் முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இதில் நடிகர்கள் அஜித், பாலகிருஷ்ணா, சேகர் கபூர் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தார்.

அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அஜித் குமார்(53) இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். சினிமா தவிர்த்து கார் ரேஸிலும் அசத்தி வருகிறார்.

பாலகிருஷ்ணா

மறைந்த தெலுங்கு நடிகரும், ஆந்திரா முன்னாள் முதல்வருமான என்டி ராமாராவின் மகனான பாலகிருஷ்ணா(64) தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் எம்.எல்.ஏ. ஆகவும் உள்ளார்.

சேகர் கபூர்

ஹிந்தி சினிமாவின் இயக்குனரும், நடிகருமான சேகர் கபூர்(79) தமிழில் கமலின் விஸ்வரூபம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments