23 C
Sri Lanka
Saturday, June 14, 2025
HomeCinema Newsமணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு

நாயகன்’ படத்தில் முதன்முறையாக இணைந்த கமலும், மணிரத்னமும் நீண்ட இடைவேளைக்குப்பிறகு தற்போது ‛தக்லைப்’ படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் சிம்புவும் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார்.

ஜூன் மாதம் திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தக்லைப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் சிம்பு நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறதாம்.

அந்தவகையில், மணிரத்னம் இயக்கத்தில் ‛செக்கச் சிவந்த வானம், தக்லைப்’ என்ற இரண்டு படங்களில் நடித்துள்ள சிம்பு, மூன்றாவது முறையாகவும் நடிக்கப்போகிறார். தற்போது கைவசமுள்ள படங்களை முடித்து கொடுத்து விட்டு மணிரத்னம் படத்தில் அவர் இணைவார் எனத் தெரிய வந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments