2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சச்சின்’ திரைப்படம், நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட படங்களில் ஒன்று. விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த இந்த காதல் படம், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
காதல் கதைகள் என்பதில் மக்களின் பெரும் விருப்பம் காணப்படும் நிலையில், ‘சச்சின்’ ஒரு முக்கியமான படமாக விளங்குகிறது. குறிப்பாக விஜய் மற்றும் ஜெனிலியாவுக்கு இடையிலான இனிமையான தொடர்பும், அவர்கள் வெளிப்படுத்தும் ரசனையான கெமிஸ்ட்ரியும் இந்த படத்திற்கு தனி சிறப்பை கூட்டுகிறது.

ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்துள்ளனர். அதில், தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் ஜான் மகேந்திரன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபி என பலர் கலந்து கொண்டுள்ளனர்.அப்போது அவர்களிடம், சச்சின் படம் முதலில் வெளியான போது அது தோல்வியடைந்தது உண்மையா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, தயாரிப்பாளர் சச்சின் படம் வெளியான அந்தச் சமயத்தில் விநியோகஸ்தர்கள் அனைவருமே நல்ல லாபம் கிடைத்ததாக கூறினர்.