23 C
Sri Lanka
Saturday, June 14, 2025
HomeStoriesதுளசி — மரவீட்டின் மர்மம்

துளசி — மரவீட்டின் மர்மம்

மரவீட்டின் அழைப்பு, பள்ளி விடுமுறை நாளில், துளசி பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள்.பக்கத்தில் காலம் கடந்து தொலைந்துபோன மரவீடு ஒன்று… நிலவின் ஒளியில் நிழலாய் அசைந்த மரங்கள்…ஆர்வத்தோடு கதவை மெதுவாகத் திறந்தாள்.

அந்த வீடின் உள்ளே… ஒரு குளிர்ச்சி, ஒரு அடக்கிய உணர்ச்சி…மறைந்திருக்கும் யாரோவின் அழைப்பு போல…

சுவற்றில் தொங்கியிருந்தது… ஒரு பழைய புகைப்படம்.ஒரு சிறிய பையன், அவனது தாய், தந்தை.ஆனால், பையனின் கண்கள் மட்டும்… நேராக துளசியை பார்த்தது போல உணர்ந்தாள்.அதிகம் தாமதிக்காமல், ஒரு நிழல் பக்கம் நகர்ந்தது.துளசியின் மனதில் ஒரு சங்கடம்… யாரோ கூவி அழைத்தது போல… இருந்தது

துளசி கதவுக்கு ஓடினாள்… கதவுகள் திறக்கவில்லை.திரும்பினாள்… பையன் அவளுக்குப் பின் நின்றுகொண்டிருந்தான்!கண்களில் ரத்தம், வாயிலிருந்து கரும்புள்ளிகள்.படர்ந்த சிரிப்பு…அவன் நெருங்கி….

துளசியின் மூச்சு உறைந்தது.அவன் கையை நீட்டி, துளசியின் கையை பிடித்தான்.அப்போது துளசி அவன் கண்ணிலிருந்த தீவிரமான வேதனையையும், தனிமையையும் பார்த்தாள்.அவன் மென்மையாக இப்படி கூறினான் —”நான் சின்னவன் தான்… ஆனால் வேண்டாம் நான் அதை சொல்ல விரும்பவில்லை ..” “நீ எனது கனவை மட்டும்… கேளேன்…” என்றான்.

அவன் பிள்ளை மனதோடு இருந்து, நெருங்கும் சோகமும், அதே சமயம் ஒரு பரிதாபகரமான பயமும் துளசியின் மனதில் பரவி விட்டது.அந்த நொடியில் துளசி புரிந்துகொண்டாள் — இங்கு அவளைத் தாக்க விரும்பும் பேய் இல்லை.உண்மையை சொல்ல யாரோ ஏங்கிக் கிடந்தது…

துளசி பையனின் குரலை கேட்டு கொஞ்சம் melt ஆகுறாள்.அவன் சொன்ன உண்மையை உணர்கிறாள்.அவள் மெதுவாக அவனது கையை பிடிக்க முயற்சிக்கிறாள்.

….மரம் முழுவதும் அசைகிற சத்தம், சுற்றிலும் இருட்டு பரவுகிறது!அவள் விழிகள் மூடியது போல இருந்தது.

உள்ளே — ஒரு பழைய குறுநாடகக் காட்சி போல — ஒரு கும்பல் பையனை சுற்றி அடிக்க, இழுத்து செல்லும் காட்சிகள்!அந்தக் குரல்கள்…அந்த அரற்றல்கள்…எல்லாம் கேட்கின்றன…

அவள் விழித்த போது, தன் கையில் பையனின் diary இருந்தது.

துளசி, ராகுலின் டைரியை படிக்க ஆரம்பிக்கிறாள்.அதில் ராகுலின் இலட்சியம் தெளிவாக இருந்தது:”நான் பெரிய விஞ்ஞானியாகி, எல்லா பிள்ளைகளும் பயமின்றி கனவு காணும் உலகத்தை உருவாக்கணும்…”ஆனால்… அதற்கு முன் கொலை செய்து விடுகின்றார்கள்.

துளசியின் கண்களில் நீர் திரண்டது.அவள் மனதில் ஒரு உறுதி எழுந்தது —”ராகுலின் கனவுகளைக் குறைய விடக்கூடாது…”துளசி தன் வாழ்க்கையை ராகுலின் கனவுகளை நிறைவேற்ற முயன்று செலவிடத் தீர்மானிக்கிறாள்.

அவள் கல்வி முடித்து, சிறுவர்களுக்கான பாதுகாப்பான, சுதந்திரமான கல்வி நிலையத்தை தொடங்குகிறாள் — ராகுலின் பெயரிலே…

கடந்துபோன பல ஆண்டுகள் கழித்து, ஒரு புது பள்ளிக்கூடத்தின் வாசலில் துளசி நின்று கொண்டிருந்தாள்.மழை தூறியது.அவள் மேலே பார்ப்பதற்கு…காலத்தின் இருண்ட ஒளியில், ஒரு சிறிய பையன் நிழல் ஒரு புன்னகையுடன் தலையசைத்து சென்றது.ராகுலின் ஆன்மா இனி சாந்தியடைந்தது.

“அவனது கனவு முடிந்தது இல்லை…அது என் வாழ்கையில் பிறந்தது.”…..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments