23 C
Sri Lanka
Saturday, June 14, 2025
HomeLocal Newsபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வாய்மூடப்படுகிறதா?

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வாய்மூடப்படுகிறதா?

titleheader logotitleசெய்திகள்எதிர்க்கட்சிக்கு கேள்வி கேட்க உரிமை இல்லையா?May 23, 2025 – 16:37 -0எதிர்க்கட்சிக்கு கேள்வி கேட்க உரிமை இல்லையா?வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் கொள்கை பிரகடனத்தின் 105 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு ஏற்ப, புதிய கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு இணக்கப்பாட்டை எட்டுவோம் என இந்த அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது.

ஆனால் இன்று அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்து. மக்களின் ஆணையை மதிப்பதாக இருந்தால், அரசாங்கம் ஒரு புதிய இணக்கப்பாட்டுக்குச் செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கையை எடுக்காது, பழைய இணக்கப்பாட்டையே தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக மின்சாரக் கட்டணம் கூட 18% ஆல் அதிகரிக்கப்படவிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற 1956 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க வெளிநாட்டுக் கடன்களை நீக்குதல் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டு மீதான விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கமானது வெளிநாட்டுக் கடன் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன், வெளிநாட்டுக் கடன், IMF ஒப்பந்தம், இருதரப்பு மற்றும் சர்வதேச கடன் வழங்குநர்கள், அவர்களுக்கு செலுத்த வேண்டிய கடன்கள் மற்றும் காலக்கெடு, கடன் இணக்கப்பாடுகளில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நிபந்தனைகள், 2028 க்குள் கடனை அடைக்க அடைய வேண்டியதன் பிரகாரம் காணப்படும் இலக்குகள் போன்ற தகவல்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.

இன்று பாராளுமன்றத்தில் நான் இது குறித்து கேள்வி எழுப்பும்போது, ​​அரசாங்கம் பதிலளிக்க கால அவகாசம் கேட்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட உரையை ஆக்கும் போது இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அதில் இருந்திருக்க வேண்டும். ஒன்றில் அரசாங்கம் இதற்குப் பதில்கள் இல்லாமல் உரைகளை ஆற்றி வருகிறது அல்லது இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அரசாங்கத்திற்கு தெரியாது போலும்.

அரசாங்கம் இப்போது மீண்டும் மின்சாரக் கட்டணங்களை 18% அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விடயங்களின் அடிப்படையில் குடிநீர் கட்டண அதிகரிப்பு குறித்து கேள்விகளை எழுப்பிய போது, ​​அரசாங்கம் இந்த விடயத்தை நீர்மின் உற்பத்தியோடு குழப்பிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தல் மேடையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வலுப்படுத்துவோம் என்று சொன்னாலும், இந்த ஆளுந்தரப்பினர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அழித்து வருகின்றனர். எந்தவொரு விடயத்திலும் எதிர்க்கட்சிக்கு கேள்வி கேட்கவோ அல்லது ஊகிக்கவோ உரிமை இல்லை என்றவாறே அரசாங்கம் கூறுகிறது. புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளும்போது, ​​பொறுப்பானவர்களிடமிருந்து கட்டணம் அறவிடப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் பானங்களின் விலையை அதிகரிப்பது நியாயமானது.

என்றாலும், பாராளுமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான உணவு விலையை அதிகரிப்பது நியாயமற்ற செயலாகும். சாதாரண மக்களுக்கு அழுத்தங்களை சுமத்தாது நீதியை நிலைநாட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இன்று அரசாங்கம் வெளிநாட்டுக் கடன் குறித்து விவாதித்தாலும், எதிர்க்கட்சி கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியாதுபோயுள்ளது. இதற்குக் காரணம் தரவு இல்லாமையா? அல்லது அறியாமையா? என கேள்வி எழுப்புகிறோம்.

2.2 மில்லியன் மக்கள் அனாதைகளாக்கப்பட்டு விரக்தியில் விடப்பட்டிருப்பது குறித்து தான் வருத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். பல்நோக்கு துறையில் 4,500 பேரை நிரந்தரமாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சுமார் 1,000 பேரளவில் வனஉலா வழிகாட்டிகளாக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஒரு நாளைக்கு ரூ. 1,000 சம்பளத்துக்கு வேலை செய்து வருகின்றனர். ஆகவே இந்த நிரந்தரமாக்கும் நடவடிக்கையில் இவர்களையும் நிரந்தரமாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments