ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் சூரியனின் காந்தப்புலம் மாறும். இந்த நேரங்களில் சூரியனிலிருந்து புயல் வெளியாகிறது. இப்போது இதுபோன்ற ஒரு புயல் பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய புயல் என்றால் என்ன? ஒரு காந்தத்தை எடுத்து நூலில் கட்டி தொங்கவிட்டால் அது வட-தென் திசையை காட்டி நிற்கும். இதன் மேம்பட்ட வடிவம்தான் காம்பஸ். பூமியில் காந்தப்புலம் இருப்பதால் அதை நோக்கி காந்தங்கள் ஈர்க்கப்படுகின்றன.
இதேபோல சூரியனிலும் இருக்கிறது. இந்த காந்த புலம் நிலையாக இல்லாமல் ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இங்கேயேயும், அங்கேயும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வின்போது சூரியனிலிருந்து கதிர்வீச்சு வெடித்து கிளம்புகிறது.
இதைத்தான் சூரிய புயல் என்கிறார்கள். 2024 தொடங்கி 2026 வரை சூரியனில் காந்தப்புல மாற்றம் நடப்பதால் வலுவான சூரிய புயல்கள் உருவாகி வருகிறது என்றும், இது பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
புயல் எப்படி இருக்கும்? நம்மூரில் கடலில் உருவாகிறதே புயல், அப்படி ஒரு சமயத்தில் ஒரே ஒரு புயல் மட்டும் உருவாகாது. தினம் தினம் ஒரு புயல் சூரியனில் உருவாகும். தினம் தினம் என்பதை விட ஒரு சில மணி நேரங்களுக்கு ஒரு புயல் என்று சொன்னால் கூட பொருத்தமாகத்தான் இருக்கும். இந்த புயல்கள் ஒளியின் வேகத்தில் பூமியை நெருங்கும். அதாவது சூரியனில் புயல் உருவான 8வது நிமிடத்தில் அது பூமியை தாக்கும்.
எனவே இதிலிருந்து தப்பிப்பது, அல்லது புயல் உருவானதை கண்டுபிடிப்பதே கொஞ்சம் கஷ்டம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.