7 கோடிக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவந்த விமான பயணிகள் நால்வரை விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேக நபர்கள் நேற்று (21) பிற்பகல் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர். இந்தக் குழுவில் திருமணமான தம்பதியும் ஆண் மற்றும் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. சந்தேகநபர் இந்த போதைப்பொருள் கப்பலை தாய்லாந்திலிருந்து கொள்வனவு செய்து, பின்னர் இந்தியாவின் பெங்களூருக்குப் பயணம் செய்து, அங்கிருந்து இண்டிகோ எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். சந்தேக நபர்கள் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வணிகர்களுக்கான “Red Channel” வழித்தடம் ஊடாக போதைப்பொருளுடன் வெளியேற முயன்றதாகக் கூறப்படுகிறது. பெண் சந்தேக நபர் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் எனவும், ஆண் சந்தேக நபர் கொழும்பு 15 பகுதியில் வசித்து வரும் வர்த்தகராவார். மேலும், தம்பதியினர் கொழும்வு வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சந்தேக நபர்கள் தங்களது நான்கு பயணப்பொதிக்குள் சூட்சுமமான முறையில் வடிவமைக்கப்பட்ட அடிப்பகுதிகளில் “குஷ்” போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது, 7 கிலோகிராம் 150 கிராம் “குஷ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களையும் போதைப்பொருள் பொதியையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருட்கள் மீட்பு
RELATED ARTICLES