22.3 C
Sri Lanka
Wednesday, May 13, 2026
HomeLocal News2026 பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு?

2026 பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு?

2025 ஆம் ஆண்டில் இலங்கை எட்டிய பொருளாதார வளர்ச்சி வீதத்தை விடக் குறைவான ஒரு பெறுமதியே 2026 ஆம் ஆண்டில் பதிவாகக்கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று (22) நடைபெற்ற “BIG FOCUS” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 

சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக விவசாயத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், கைத்தொழில் துறையில் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை மற்றும் ஏற்றுமதித் துறையில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளும் பலவீனமடையும் அபாயம் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். 

உலகப் பொருளாதாரச் சூழலும் இதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய பேராசிரியர், சர்வதேச நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்புகளைக் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

உலகப் பொருளாதார வளர்ச்சி மந்தமடைவது இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டின் ஏற்றுமதியையும் பாதிக்கும் என்றும், எரிபொருள், உரம் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் சங்கிலி முறிவுகளும் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments