ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷெனன் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 33, 36 மற்றும் 37 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வுடன் தொடர்புடைய மேலதிக தகவல்களை கண்டறியும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.



