21.3 C
Sri Lanka
Monday, November 16, 2026
HomeLocal Newsஷிரந்தி ராஜபக்ஷவின் முன் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன் பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


‘சிரிலிய சவிய’  மோசடி தொடர்பான நிதிப் குற்றப் புலனாய்வு பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அவர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் இந்த முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு கடந்த 6ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இது தொடர்பில் இன்றைய தினம் (12) நீதிமன்றத்தில் முன்னிலையாகி விபரங்களை அறிக்கை செய்யுமாறு நிதிப் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையிலேயே, இந்த முன் பிணை கோரிக்கையை நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.  


இதனிடையே, தற்போது ‘சிரிலிய சவிய’  மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகளுக்கமைய தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஷ நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments