22.3 C
Sri Lanka
Wednesday, May 13, 2026
HomeLocal Newsவெடிப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது

வெடிப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது

வீரக்கெட்டிய, கசாகல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் பெருமளவிலான வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் வனமுல்கிரிகல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

தங்கல்ல பகுதியில் இருந்து வந்த கெப் ரக வாகனத்தை சோதனையிட்ட போது, அதன் பின்புறத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது 14 கிலோகிராம் வெடிமருந்து, 240 ஜெலட்டின் குச்சிகள், 350 கிலோகிராம் அமோனியா, 490 டெட்டனேட்டர்கள், 5600 அடி நீளமான வெடிமருந்து நூல் என்பன மீட்கப்பட்டுள்ளன. 

மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, இந்த வெடிபொருட்கள் கல் உடைக்கும் பணிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக வீரக்கெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments