22.3 C
Sri Lanka
Wednesday, May 13, 2026
HomeSports Newsவீரர் தோனியின் செயல்திறன் குறித்து அஸ்வின் கணிப்பு

வீரர் தோனியின் செயல்திறன் குறித்து அஸ்வின் கணிப்பு

ஐபிஎல் 2026 சீசன் குறித்த பல கணிப்புகளை முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், வெளியிட்டுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இந்த சீசனில் குறைந்தபட்சம் 450 ரன்கள் சேர்ப்பார் என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். விராட் கோலி தற்போது ஆறு போட்டிகளில் 247 ரன்களுடன், 49.50 சராசரி மற்றும் 157-க்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார்.

அஸ்வின் மேலும் கணித்தபடி, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனி இந்த ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடுவார். 44 வயதான தோனிக்கு, சீசன் தொடங்கும் முன் ஏற்பட்ட காயம் காரணமாக இதுவரை களமிறங்கவில்லை. சிஎஸ்கேவின் லீக் போட்டிகளில் ஏழே மீதமுள்ளன.

ஐபிஎல் 2026 பர்பிள் கேப் வெற்றியாளராக குஜராத் டைட்டன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை அஸ்வின் தேர்வு செய்துள்ளார். கடந்த சீசனில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தவர். இந்த சீசனில் ஆறு ஆட்டங்களில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, தற்போது பர்பிள் கேப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பிரசித் கிருஷ்ணா இந்த ஆண்டு மீண்டும் பர்பிள் கேப் வென்றால், புவனேஷ்வர் குமாருக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு முறை இந்தச் சாதனையை நிகழ்த்தும் இரண்டாவது பந்துவீச்சாளர் ஆவார்.ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்த சீசனில் ஐந்து அரை சதங்களை அடிப்பார் என்றும் அஸ்வின் கணித்துள்ளார்.

15 வயதான வைபவ், ஏழு ஆட்டங்களில் இதுவரை இரண்டு அரை சதங்கள் அடித்து, 36-க்கும் மேற்பட்ட சராசரியுடன், 220.86 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார்.முடிவாக, ஐபிஎல் 2026 சீசனில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் 270 ஆக இருக்கும் என்றும், ஒரு கேப்டன்சி மாற்றம் நிகழும் என்றும் அஸ்வின் கணித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments