21.9 C
Sri Lanka
Sunday, August 9, 2026
HomeLocal Newsவாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டாய தரப் பரிசோதனை அமுல்!

வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டாய தரப் பரிசோதனை அமுல்!

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இச்செயற்பாட்டை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் வாகன விபத்துக்களுக்குச் சாரதிகளின் கவனயீனம் மற்றும் வாகனங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளுமே பிரதான காரணம் எனச் சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பில் கவனம் செலுத்தி பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்தத் தரப் பரிசோதனைக்காகத் தகுதிவாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்காகத் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த ஆட்சேர்ப்புகளின் பின்னர் செப்டெம்பர் மாத இறுதிக்குள் இச்செயற்பாட்டை ஆரம்பிக்க முடியும் எனத் தெரிவித்த அவர், அதற்கமைய இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments