23.6 C
Sri Lanka
Monday, September 14, 2026
HomeWorld Newsவரலாறு காணாத கனமழையால் ஜப்பானில் 8 பேர் உயிரிழப்பு; நரிட்டா விமான நிலையத்தில் 7,000 பயணிகள்...

வரலாறு காணாத கனமழையால் ஜப்பானில் 8 பேர் உயிரிழப்பு; நரிட்டா விமான நிலையத்தில் 7,000 பயணிகள் சிக்கினர்

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவை ஒட்டியுள்ள சிபா மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் போக்குவரத்து பாதிப்புகளில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிபா மாகாணத்தின் சில பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் 360 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. சிபா பகுதியில் 24 மணி நேரத்தில் பதிவான மழைவீழ்ச்சி 367 மில்லிமீற்றராக இருந்ததுடன், இது 2013ஆம் ஆண்டு பதிவான 309 மில்லிமீற்றர் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், பல பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஜப்பான் தற்காப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிபா நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்காக தற்காலிக பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நரிட்டா விமான நிலையத்தில் 7,000 பயணிகள்

கனமழையால் சாலைகள் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால், டோக்கியோவின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் சிக்கியிருந்தனர்.

விமான நிலையத்தில் தங்கியிருந்த பயணிகளுக்கு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் தூங்கும் பைகள், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

வெளியே செல்லும் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்டதால், பல பயணிகளால் ஹோட்டல்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெள்ளிக்கிழமை பெரும்பாலான விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments