30.6 C
Sri Lanka
Friday, April 10, 2026
HomeBreaking Newsயாழில் T56 ரக துப்பாக்கி கைப்பற்றல்

யாழில் T56 ரக துப்பாக்கி கைப்பற்றல்

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) இரவு ரி 56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments