23.6 C
Sri Lanka
Monday, September 14, 2026
HomeSports Newsமீண்டும் கேப்டனாகும் ஜோ ரூட் – நாளை முதல் டெஸ்ட்

மீண்டும் கேப்டனாகும் ஜோ ரூட் – நாளை முதல் டெஸ்ட்

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 19ஆம் தேதி லீட்ஸில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி இறுதிக்கட்ட தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஜோ ரூட் மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். ஸ்டோக்ஸ் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் காலத்தில் உருவாக்கப்பட்ட அணுகுமுறையை முழுமையாக மாற்றப் போவதில்லை என்றும், தேவையான இடங்களில் சிறிய மாற்றங்களை மட்டுமே மேற்கொள்ளப் போவதாக ரூட் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு சல்மான் அலி ஆகா தலைமை தாங்குகிறார். வழக்கமான அணித்தலைவர் பாபர் அசாம் காயம் காரணமாக தொடரில் இடம்பெறவில்லை. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக டான் லாரன்ஸ் ஆறாவது இடத்தில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லீட்ஸில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி ஜோ ரூட்டுக்கு சிறப்பு வாய்ந்ததாகவும் அமையவுள்ளது. தனது சொந்த மைதானமான ஹெடிங்லியில் மீண்டும் அணித்தலைவராக களமிறங்கும் ரூட், புதிய பொறுப்புடன் அணியை வழிநடத்தவுள்ளார்.

இங்கிலாந்தின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங் பொறுப்பேற்க உள்ள நிலையில், இந்தத் தொடருக்கு இடைக்காலமாக மார்கஸ் ட்ரெஸ்கோதிக் அணியை வழிநடத்துகிறார்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 19 முதல் 23 வரை ஹெடிங்லியிலும், இரண்டாவது டெஸ்ட் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை லோர்ட்ஸிலும், மூன்றாவது டெஸ்ட் செப்டம்பர் 9 முதல் 13 வரை எட்ஜ்பாஸ்டனிலும் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடர், பென் ஸ்டோக்ஸ் இல்லாத புதிய இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முதல் பெரிய சோதனையாக பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments