பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 11 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டின் கீழ், மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு. கந்தையா ராஜ்குமார் அவர்களின் தலைமையில் , மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட MTC அருகாமையில் நீண்ட காலமாக உடைந்து பழுதடைந்த பாலம் ஒன்றைப் புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று இடம்பெற்றது.

மஸ்கெலியா கௌரவ தவிசாளர் திரு. ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நீண்ட காலமாகப் போக்குவரத்துத்துறையில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வந்த இப்பகுதி மக்களின் துயரங்களைப் போக்கும் வகையில், இப்பாலத்தை நவீன முறையில் புனரமைக்க இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளரும், குறித்த வட்டாரத்திற்குப் பொறுப்பான கௌரவ உறுப்பினருமான திரு. ராஜா அசோக் அவர்கள், பிரதேச சபையின் செயலாளர், தோட்ட முகாமையாளர் மற்றும் பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..





