ரஷ்யாவில் சிறைக்குள் போதைப்பொருள் கடத்த பூனை பயன்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கரோட் (Nizhny Novgorod) பகுதியில் உள்ள சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கடத்துவதற்காக ஒரு பூனை பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய கூட்டாட்சி சிறைச்சாலை சேவை (FSIN) தெரிவித்துள்ளது. பூனையின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு துணி காலர்களுக்குள் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
சிறை அதிகாரிகள் பூனையை சிறைக்குள் நுழைவதற்கு முன்பே தடுத்து நிறுத்தி, காலர்களை அகற்றினர். மோப்ப நாய் மூலம் சோதனை செய்தபோது அவற்றில் போதைப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பூனைக்கு எந்தக் காயமும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அதிகாரிகள் அதனை விடுவித்தனர்.



