30.6 C
Sri Lanka
Friday, April 10, 2026
HomeLocal Newsபுத்தாண்டை கொண்டாடி வீடு திரும்புபவர்களுக்கு விசேட அறிவிப்பு

புத்தாண்டை கொண்டாடி வீடு திரும்புபவர்களுக்கு விசேட அறிவிப்பு

Shanu

புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவினை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக எதிர்வரும் ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்களுக்கு விசேட ரயில் சேவை ஒன்றை செயல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த விசேட ரயில் அட்டவணையின் கீழ் இயக்கப்படும் சேவைகள் மூலம், சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களுக்கு மீண்டும் கொழும்பு கோட்டைக்கு திரும்புவதற்கு வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காலியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காகவும், பெலியத்தையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காகவும் தலா இரண்டு விசேட ரயில் சேவைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காக இரண்டு ரயில் சேவைகளை இயக்கவும் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் பொது மக்களுக்கு மீண்டும் கொழும்பு கோட்டைக்கு பயணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments