30.6 C
Sri Lanka
Friday, April 10, 2026
HomeUncategorizedபாணந்துறை கடலில் நீராடிய இரு சிறுவர்கள் மாயம்

பாணந்துறை கடலில் நீராடிய இரு சிறுவர்கள் மாயம்

பாணந்துறையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

பாணந்துறை மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த சிலர் புதன்கிழமை (16) மாலை 5.30 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது ஐந்து பேர் கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர். 

ஐவரில் மூவரை அப்போது பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை கடலோர கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காக்கும் குழுவினர் மீட்டுள்ளனர். 

பண்டாரகம அட்டலுகம பகுதியைச் சேர்ந்த மொஹமட் இர்பான் மொஹமட் முஹமட் மற்றும் யாசிர் அரபாத் அகமது ஆகிய சிறுவர்களே கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

இரண்டு சிறுவர்களில் ஒருவர் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மற்றையவர் காப்பாற்ற முயன்றதாகவும் துரதிர்ஷ்டவசமாக இருவரும் காணாமல்போயுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடலில் மூழ்கி காணாமல்போன இரு சிறுவர்களது உடல்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments