நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்து வருகின்றார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது, கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான தனது பொறுப்பை நீதியமைச்சர் உரிய முறையில் நிறைவேற்றத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை தொடர்பான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருவதுடன், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.



