31.3 C
Sri Lanka
Thursday, June 11, 2026
HomeLocal Newsநீண்ட வார விடுமுறையை முன்னிட்டு விசேட எச்சரிக்கை

நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு விசேட எச்சரிக்கை

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு வீதி விபத்துகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், பொதுமக்கள் அதிக அவதானத்துடன் பயணிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

விடுமுறை காலத்தில் மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதால், சாலைகளில் வாகன நெரிசல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், சாரதிகள் வேகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதுடன், போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மதுபானம் அருந்தி வாகனம் செலுத்துதல், அதிக வேகத்தில் பயணித்தல் மற்றும் கவனக்குறைவான சாரதி நடவடிக்கைகள் விபத்துகளுக்கான முக்கிய காரணிகளாக இருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விடுமுறை காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments