25.7 C
Sri Lanka
Monday, November 16, 2026
HomeLocal Newsநாமலின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு நவம்பர் 3 க்கு ஒத்திவைப்பு

நாமலின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு நவம்பர் 3 க்கு ஒத்திவைப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரீஸ் (Krrish) நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை விண்ணப்பம் குறித்த அதிரடி உத்தரவை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கிரீஸ் நிறுவன கொடுக்கல் வாங்கல் முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான தீர்ப்பு, எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தரப்பு மற்றும் சந்தேகநபர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தரப்பு முன்வைத்த காரசாரமான வாதங்களையும் கருத்துக்களையும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம கவனமாகப் பரிசீலித்தார். Lmஇதன் பின்னரே பிணை உத்தரவுக்கான தேதியை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

தலைநகரின் முக்கிய பகுதியான கொழும்பு கோட்டைப் பிரதேசத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘ட்ரான்ஸ்வேர்க்’ (Transworks) சதுக்க நிலத்தை, பிரம்மாண்ட பன்முகத் திட்டத்திற்காக கிரீஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ய உதவி புரிந்தமைக்காக, சுமார் 100 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments