30.6 C
Sri Lanka
Friday, April 10, 2026
HomeBreaking Newsதேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு

தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு

பெரிய வெள்ளி தினமான நேற்றிரவு கண்டி, மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது துப்பாக்கிசூடு மேற்கொள்ளப்பட்டசம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் தப்பிச் சென்ற சந்தேக நபர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தேவாலயத்தின் ஆயர் உடனான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டபோது தேவாலயத்தில் யாரும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளையதினம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments