31.3 C
Sri Lanka
Thursday, June 11, 2026
HomeLocal Newsதெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து மாற்ற அறிவிப்பு

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து மாற்ற அறிவிப்பு

தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன இடைமாறல் பகுதியில் கொழும்பு நோக்கிச் செல்லும் பிரவேச வழி, சிறிய வாகனங்களுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

குறித்த இடைமாறல் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 

இருப்பினும், அந்தப் பிரவேச வழியூடாக கொழும்பு நோக்கிய கனரக வாகனப் போக்குவரத்து மற்றும் மாத்தறை நோக்கிய வாகனப் போக்குவரத்து என்பன வழமை போன்று இடம்பெறுவதாக அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments