வானொலி மற்றும் ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், Dhuruvan Media College ஏற்பாட்டில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் தொடர்பான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை இன்று நடைபெற்றது.

இந்தப் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டவர்களுக்கு, வானொலி நிகழ்ச்சிகளைத் திறம்பட தொகுத்து வழங்குதல், செய்திகளைத் தெளிவாகவும் முறையாகவும் வாசித்தல், குரல் உச்சரிப்பு மற்றும் செய்தி வாசிப்பு நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், ஊடகத்துறையில் பணியாற்றுவதற்குத் தேவையான அடிப்படை திறன்கள் மற்றும் நடைமுறை அணுகுமுறைகள் தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு தொடர்ச்சியான கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஒருநாள் முழுவதும் இடம்பெற்ற இந்தப் பயிற்சிப்பட்டறையின் நிறைவில், இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.ஊடகத்துறையில் புதிய தலைமுறையினரின் திறன்களை வளர்த்து, அவர்களுக்கு நடைமுறை அனுபவத்துடன் கூடிய கற்றல் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், Dhuruvan Media Collegeஇவ்வாறான பயிற்சி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.




