20.3 C
Sri Lanka
Sunday, April 19, 2026
HomeLocal Newsதலைக்கு எண்ணெய் தேய்க்கும் தேசிய நிகழ்வு ஆரம்பம்

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் தேசிய நிகழ்வு ஆரம்பம்

சிங்கள தமிழ் புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு இணைவாக இடம்பெறும் தலையில் எண்ணெய் தேய்க்கும் அரச உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஸ்ரீ மகா நாத தேவால வளாகத்தில் இன்று (16) காலை 9.04 சுப நேரத்தில் ஆரம்பமானது. 

குறித்த நிகழ்வானது சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெறுகிறது. 

இம்முறை தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாரம்பரிய அரச நிகழ்வை ஊடக அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 

இதேவேளை, மிருகக்காட்சிசாலையில் சுப நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு யானையிடமிருந்து ஆரம்பமானது. 

இலங்கையில் வாழும் மிகவும் வயதான விலங்கான 153 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆமையின் தலையிலும் எண்ணெய் பூசப்பட்டது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்ட பழுப்பு நிற கரடியின் தலையிலும் எண்ணெய் தேய்க்கப்பட்டது. 

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், பிரதி பணிப்பாளர் தினுஷிகா மானவடு உட்பட மிருகக்காட்சிசாலையின் முகாமைத்துவ அதிகாரியால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments