டைட்டானிக் கப்பல் குறித்து முழுமையான டிஜிட்டல் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான பகுப்பாய்வு, அழிந்த அக்கப்பலின் இறுதி மணித்துளிகள் பற்றி புதிய விவரங்களை அளித்துள்ளது.
1912 ஆம் ஆண்டில் பனிப்பாறையில் மோதிய பின்னர் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது, அந்த கப்பல் எவ்வாறு இரண்டாகக் உடைந்தது என்பதைக் காட்டும் முப்பரிமாண படம், அந்த பேரழிவில் 1,500 பயணிகள் உயிரிழந்ததை வெளிப்படுத்துகின்றது.டைட்டானிக் கப்பலில் இருந்த கொதிகலன் அறையின் புதிய காட்சி ஒன்றையும் இந்த ஸ்கேன் வெளிப்படுத்துகிறது.
கப்பலின் மேல் பகுதியில், ஏ4 பேப்பரின் அளவில் இருந்த சிறிய துளைகள், கப்பல் மூழ்குவதற்கு காரணமாக அமைந்தன என்பதை கணினி மூலம் உருவாக்கப்பட்ட படம் காட்டுகிறது.”பேரழிவை கடைசியாக நேரில் கண்ட சாட்சி டைட்டானிக். அதனிடம் சொல்வதற்கு இன்னும் பல கதைகள் உள்ளன,” என்கிறார் டைட்டானிக் ஆய்வாளரான பார்க்ஸ் ஸ்டீபன்சன்.
நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் அட்லாண்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள டைட்டானிக்: தி டிஜிட்டல் ரெசரெக்ஷன் என்ற புதிய ஆவணப்படத்திற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலின் பனிப்பாறைகள் சூழ்ந்த நீரில் 3,800 மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் உள்ளன.இந்த பாகங்கள், நீருக்கடியில் செயல்படும் ரோபோக்கள் மூலம் விரிவாக படமாக்கப்பட்டது.
ஒவ்வொரு கோணத்திலிருந்தும் எடுக்கப்பட்ட 7 லட்சத்திற்கும் மேற்பட்ட படங்கள் இந்த சிதைந்த கப்பலின் “டிஜிட்டல் இரட்டையை” உருவாக்க பயன்படுத்தப்பட்டன.
இது 2023 ஆம் ஆண்டில் இந்த டிஜிட்டல் இரட்டை பிபிசி மூலம் பிரத்யேகமாக உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது .பெரிய அளவில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள், ஆழமான, இருண்ட கடல் பகுதியில் உள்ளன.
பெரிய அளவில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள், ஆழமான, இருண்ட கடல் பகுதியில் உள்ளன.
அதனை நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் ஆராய்ந்தால் குறைந்த காட்சிகளையே பெற முடிகிறது.



