21.9 C
Sri Lanka
Sunday, August 9, 2026
HomeLocal Newsடெங்கு அச்சுறுத்தல் தொடர்கிறது..மரணங்கள் உயர்வு!

டெங்கு அச்சுறுத்தல் தொடர்கிறது..மரணங்கள் உயர்வு!

நாட்டில் டெங்கு நோய் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஓழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு ஓழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி 80,114 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான தரவுகளின்படி, அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் ஆண்டின் இதுவரையில் 16,950 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,021 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5534 பேரும், கண்டியில் 5437 பேரும், களுத்துறையில் 5245 பேரும் இரத்தினபுரியில் 4482 பேரும், காலியில் 4430 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments