23.6 C
Sri Lanka
Monday, September 14, 2026
HomeCinema Newsசூரியின் ‘மண்டாடி’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் – செப்டம்பர் 10ல் திரைக்கு வருகிறது

சூரியின் ‘மண்டாடி’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் – செப்டம்பர் 10ல் திரைக்கு வருகிறது

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் தணிக்கைப் பணிகளை நிறைவு செய்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்த திரைப்படம் கடலை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு தணிக்கை குழு U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், திரைப்படம் 2026 செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பின்னணியில் உருவாகியுள்ள மாறுபட்ட கதைக்களமும், சூரியின் புதிய தோற்றமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments