23.6 C
Sri Lanka
Tuesday, September 15, 2026
HomeWorld Newsசிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றுமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்பாக குடும்பத்தினரும், அவரது கட்சியான PTI-யும் நீண்டகாலமாக கவலை வெளியிட்டு வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 48 மணி நேரத்திற்குள் இம்ரான் கான் மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும். மேலும், அவரது சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை இம்ரான் கானின் PTI கட்சி வரவேற்றுள்ளது. அவரது குடும்பத்தினரும், நீண்டகாலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தற்போது பதில் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கான் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவரது உடல்நிலை தொடர்பான விவகாரம் பாகிஸ்தான் அரசியலில் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றுவருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments