உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, Smart City Textile நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான ஓவியம் வரைதல் மற்றும் வர்ணம் தீட்டும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்தப் போட்டிகள் International University வளாகத்தில் இடம்பெற்றதுடன், ஹட்டன் பிரதேசத்தில் பல்வேறு பாலர் பாடசாலைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

சிறுவர்களின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, Smart City Textile நிறுவனத்தின் உரிமையாளரின் முழுமையான அனுசரணையுடன் நடைபெற்றது.

நிகழ்வில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதுடன், போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் வழங்கப்பட்டனஇதேவேளை துருவன் செய்தி சேவைக்கு மாணவர்கள் பாடல்களை பாடி தங்களுடைய சந்தோஷத்தினை வெளிப்படுத்தினர்.




