23.4 C
Sri Lanka
Tuesday, October 13, 2026
HomeLocal Newsசலேவின் வைத்தியக் குழுவைச் சேர்ந்த 10 வைத்தியர்களுக்கு அழைப்பாணை

சலேவின் வைத்தியக் குழுவைச் சேர்ந்த 10 வைத்தியர்களுக்கு அழைப்பாணை

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியக் குழுவில் (Medical Board) உள்ள 10 வைத்தியர்களை ஒக்டோபர் 06 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் பசன் அமரசேன அழைப்பாணை விடுத்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தாக்கல் செய்த மனு ஒன்றின் ஊடாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சுரேஷ் சலே உடல் நல குறைவு காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments