21.9 C
Sri Lanka
Sunday, August 9, 2026
HomeWorld Newsசமூக வலைதளங்களில் பரபரப்பு – இத்தாலி பிரதமரின் இன்ஸ்டாகிராமில் இந்தியர்களின் கோரிக்கை

சமூக வலைதளங்களில் பரபரப்பு – இத்தாலி பிரதமரின் இன்ஸ்டாகிராமில் இந்தியர்களின் கோரிக்கை

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே பாராளுமன்றத்தை நோக்கி கடந்த 20-ந்தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர்….

போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை விட்டு இன்னும் வெளியேறவில்லை என கூறப்படுகிறது. இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க தினமும் ஏராளமான இளைஞர்கள் வெளியூர்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஜந்தர்மந்தரை சுற்றி இணைய சேவை முடக்கப்பட்டு இருக்கிறது.

மெட்ரோ ரெயில் சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன. அதாவது அங்குள்ள 16 மெட்ரோ ரெயில.நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இருந்தாலும் இளைஞர்கள் எப்படியோ அங்கு வந்து விடுகிறார்கள்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்து வருவது, டெல்லியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

இதற்கிடையே இன்று இவர்களது போராட்டம் 35-வது நாளாக எட்டி உள்ளது.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை…

இந்த போராட்டத்துக்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இதனிடையே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நாளை வரை நேரம் கேட்ட மத்திய அரசு, 2 கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்துள்ளது. பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாளை 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். போராட்டகார‌ர்கள் மீதான எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய மத்திய அரசு… சம்மதம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த நீட் மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வேண்டும். மாணவர்களை …
கைது செய்யும் நடவடிக்கையை டெல்லி போலீஸ் கைவிட வேண்டும். பிரதான் ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் என கூறினார்.
2 மணி நேரம் போராட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற‌து. போராட்ட குழுவின் கோரிக்கை குறித்து விவாதித்தோம். போராட்ட குழுவின் கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என மத்திய மந்திரி ஜே.பி. நட்டா கூறினார்.

சர்வதேச அளவில் கவனம்…
இந்தநிலையில், நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், திடீர் திருப்பமாக, நாட்டைத் தாண்டி சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் மாறியிருக்கிறது.

இத்தாலி பிரதமர் மெலோனி


இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கான கருத்துப் பிரிவில் ஏராளமானோர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் என்று மெலோனிக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்….

ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்ற போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதல்களைத் தொடர்ந்து போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலி பிரதமர் வரை சென்றிருக்கிறது…. மாணவர்களின் மிகப்பெரிய போராட்டத்தின் தாக்கம் இப்போது சர்வதேச அளவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது….

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்
உலகத் தலைவர்களில், பிரதமர் நரேந்திர மோடியுடன் மிகவும் நட்பாகப் பழகும் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஏராளமானோர் நீட் தேர்வு குறித்துப் பேசியிருக்கிறார்கள். இந்திய மாணவர்களின் குரல்களைக் கேளுங்கள், உங்கள் அருமை நண்பரை பதவி விலகச் சொல்லுங்கள், அடுத்த முறை பிரதமர் மோடியைப் பார்க்கும்போது இந்திய மாணவர்கள் ஜூலை 20ஆம் தேதி என்ன செய்தார்கள் என்று கேளுங்கள் என்றெல்லாம்… கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.

இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது…
“அன்பிற்குரிய நண்பரான” மோடியை பதவி விலகுமாறு அவரிடம் வலியுறுத்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவது சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments