கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் விஜயசீலன் சுதர்சன் அவர்கள் மற்றும் கௌரவ உறுப்பினர் ராமதாஸ் சாந்தினி அவர்களின் கோரிக்கைக்கு இணங்க கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களினால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்ட முன்மொழிவின்படி மத்திய மாகாண சபையின் 20 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கிட்டின் கீழ், வட்டக்கொடை கீழ்ப்பிரிவு பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்திகழ்வில் கொட்டகலை பிரேதச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரஷாந்த் அவர்கள், கௌரவ உறுப்பினர் விஜயசீலன் சுதர்சன் அவர்கள், கௌரவ உறுப்பினர் ராமதாஸ் சாந்தினி அவர்கள், தோட்ட முகாமையாளர் மற்றும் பிரதேச பொதுமக்கள் என்போர் கலந்துகொண்டனர்.






