பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு கொட்டகலையில் இடம்பெற்றது.

“சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு தினம்” என்ற கருப்பொருளில் நேற்று (19) நடைபெற்ற இந்த நிகழ்வில், கொட்டகலை பிரதேச சபையினால் நடத்தப்பட்ட கிரிக்கெட், பூப்பந்து மற்றும் சித்திரப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகளில் 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகளில் 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் வூட்டன் ஹில்ஸ் கோவில் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதேச சபையின் உப தலைவர் யாகுல் மேரி, உறுப்பினர்கள், திம்புள்ள – பத்தனை பொலிஸ் உத்தியோகத்தர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபையின் செயலாளர் சிவராம் ராஜவீரன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.






