21.3 C
Sri Lanka
Monday, November 16, 2026
HomeLocal Newsகஹவத்தை இரஞ்சித் ஜெய்கர் ஆசிரியரின் வத்தளையில் 'காலம் மறந்த கதைகள்' நூல் அறிமுகமும், தெளிவத்தை...

கஹவத்தை இரஞ்சித் ஜெய்கர் ஆசிரியரின் வத்தளையில் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகமும், தெளிவத்தை ஜோசப் ஞாபகார்த்த விருது வழங்கலும்

*தோழர் இரஞ்சித் ஜெயகர் எழுதிய ‘காலம் மறந்த கதைகள்’ எனும் நினைவுப் பதிகை (Memoir) நூல் அறிமுக விழா வத்தளையில் இடம்பெறவுள்ளது.இந்நிகழ்வின் போது, ஆவணக்காப்பு ஆய்வுப் பணிகளுக்காகவும், தகவல் களஞ்சியமாக இயங்குவதற்காகவும் அவருக்கு ‘தெளிவத்தை ஜோசப் ஞாபகார்த்த விருது – 2026’ வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

வத்தளையில் இயங்கும் தெளிவத்தை ஜோசப் ஆய்வகம், ஆவணகம் இந்த விருதினை வழங்கி வருகிறது.இதற்கமைய,- *2023 ஆம் ஆண்டு* மலையக ஆய்வாளர் மு.சி. கந்தையா (கூடலூர்) அவர்களுக்கு திருச்சி தமிழ்க்காவிரி இதழ் – தமிழகன் திருச்சிராப்பள்ளி குழுவுடன் இணைந்து கோவை மலையகம் 200 மாநாட்டிலும்,- *2024 ஆம் ஆண்டு* மலையக ஆவணக்காப்பாளர் வட்டகொடை சுப்பையா ராஜசேகரன் அவர்களுக்கு பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்துடன் இணைந்து தெளிவத்தை மண்ணிலும்,- *2025 ஆம் ஆண்டு* ஆவணக்காப்பாளர் டீ.எஸ். டேவிட் அவர்களுக்கு எல்லா குறிஞ்சிப்பேரவையுடன் இணைந்து எல்லா, நிவ்பர்க் வித்தியாலயத்திலும்விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

அந்த வரிசையில் 2026 ஆம் ஆண்டிற்கான விருது இரஞ்சித் ஜெயகர் அவர்களுக்கு வத்தளையில் வழங்கப்படவுள்ளது. முன்னதாக இவ்விழா ஹட்டனில் நடத்த திட்டமிடப்பட்ட போதும், தவிர்க்க முடியாத காரணங்களால் வத்தளைக்கு மாற்றப்பட்டுள்ளது.2027 ஆம் ஆண்டிற்கான தெளிவத்தை ஞாபகார்த்த விருது வழங்கல் விழாவை இரத்தினபுரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வத்தளை பிரதேசத்தில் இத்தகைய நூல் வெளியீடுகளை ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.இந்நிகழ்வில் கலை, இலக்கிய செயற்பாட்டாளர்கள், பாடசாலை மாணவர்கள், நலன் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆர்.அஜித்குமார் சிரேஷ்ட அறிவிப்பாளர், ஊடகவியலாளர்,பழைய மாணவர் இ/ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயம் கஹவத்தை .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments