23.4 C
Sri Lanka
Tuesday, October 13, 2026
HomeLocal Newsகடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை, மன்னார் மாவட்டங்களுக்கும் கடும் மின்னல் தாக்க வாய்ப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (02) இரவு 11.30 மணி வரை இந்த அறிவித்தல் செல்லுபடியாகும். இதற்கமைய, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மின்னல் தாக்கம் ஏற்இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments