பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், குறித்த கடற்பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த கடற்பகுதிகளில் பயணம் மேற்கொள்வோர் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கடல் வானிலை எச்சரிக்கை நாளை (28) முற்பகல் 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



