அமெரிக்கா ஈரானை எதிர்காலத்தில் “முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதார தனிமைப்படுத்தலுக்கு” உள்ளாக்கக்கூடும் என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார். ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் மேலதிக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தரப்போ, இவ்வாறான பொருளாதார அழுத்தங்கள் ஏற்கனவே தோல்வியடைந்த கொள்கைகள் என்றும், அவை பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.



