23.6 C
Sri Lanka
Monday, September 14, 2026
HomeWorld Newsஈரானுடன் ஏற்பட்ட போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் ஒப்பந்தமே சிறந்த வழி – ஈரான் ஜனாதிபதி

ஈரானுடன் ஏற்பட்ட போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் ஒப்பந்தமே சிறந்த வழி – ஈரான் ஜனாதிபதி

அமெரிக்காவுடனான நீடித்த மோதலுக்கு தீர்வு காண்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமே சிறந்த வழி என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை “போரும் இல்லை, அமைதியும் இல்லை” என்ற நிலை என அவர் வர்ணித்துள்ளதுடன், நாட்டின் தேசிய நலன், கண்ணியம் மற்றும் விவேகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் சிறந்ததாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையே ஜூன் மாதம் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 60 நாட்களுக்குள் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதுடன், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பிலும் உடன்பாட்டை எட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அந்த 60 நாள் காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையிலும், இரு தரப்புக்கும் இடையிலான முக்கிய விவகாரங்களில் இதுவரை இணக்கப்பாடு ஏற்படவில்லை. குறிப்பாக, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பில் தொடர்ந்தும் முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

இதேவேளை, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரானின் பொருளாதார நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தற்போதைய நிச்சயமற்ற சூழலை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம் எனவும் ஈரான் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளுக்கு அண்டை நாடுகள் ஆதரவளித்தால் பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் புதிய தலைவர் மொஹ்சென் ரெசாயி எச்சரித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர் எதிர்வரும் திங்கட்கிழமை தெஹ்ரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments