21.3 C
Sri Lanka
Monday, November 16, 2026
HomeLocal Newsஇ.போ.ச. பேருந்து மீது கழிவு எண்ணெய் வீச்சு தாக்குதல்: தனியார் பேருந்து உரிமையாளர் உட்பட இருவர்...

இ.போ.ச. பேருந்து மீது கழிவு எண்ணெய் வீச்சு தாக்குதல்: தனியார் பேருந்து உரிமையாளர் உட்பட இருவர் கைது

​இங்கிரிய, கெட்டகேரல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றின் மீது கழிவு எண்ணெய்யை (Black Oil) ஊற்றி, அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு (27) கெட்டகேரல்ல பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம டிப்போவிற்குச் சொந்தமான, கரந்தனையிலிருந்து ஹொரண நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தையே சந்தேகநபர்கள் இலக்கு வைத்துள்ளனர்.​முச்சக்கரவண்டியில் வந்த சந்தேகநபர்கள், பேருந்தை வழிமறித்து முன் கதவு வழியாகச் சாரதி மீது கழிவு எண்ணெய்யை வீசியதுடன், சாரதி மற்றும் நடத்துனரைத் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இங்கிரிய பொலிஸாரால் தனியார் பேருந்தின் உரிமையாளர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments