21.9 C
Sri Lanka
Sunday, August 9, 2026
HomeLocal Newsஇலங்கையை நோக்கி 'எல் நினோ' தாக்கம் குறித்து எச்சரிக்கை!

இலங்கையை நோக்கி ‘எல் நினோ’ தாக்கம் குறித்து எச்சரிக்கை!

முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றமானது முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி எச்சரித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுற்றாடல் துறை அமைச்சர், ‘எல் நினோ’வின் உச்சகட்ட தாக்கம் நவம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். 

மேலும், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் வறண்ட காலநிலை நிலவக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

‘எல் நினோ’ என்பது உலகளாவிய காலநிலை மாற்ற நிகழ்வாகும் என்பதால், அதன் தாக்கங்கள் இலங்கைக்கு மட்டும் வரையறுக்கப்படுவதில்லை என்றும், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் அதிகாரப்பூர்வ காலநிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

‘எல் நினோ’ என்பது ஒரு உலகளாவிய மோசமான காலநிலை தாக்கமாகும் எனவும், அதன் தாக்கங்கள் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் மாதங்களில் நிலவக்கூடிய வறட்சி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய கடும் மழை நிலைமைகளை கருத்தில் கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்வது அவசியம் என சுற்றாடல் துறை அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி மேலும் எச்சரித்துள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments