21.3 C
Sri Lanka
Monday, November 16, 2026
HomeLocal Newsஇணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 இந்தியர்கள் கைது

இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 இந்தியர்கள் கைது

இலங்கையில் இணையத்தின் ஊடாக சட்டவிரோதமாக பணத்துக்கு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 8 வெளிநாட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவத்துகொட பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் தங்கியிருந்து கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இணையவழி சூதாட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தலங்கம காவல்துறையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கடுவலை நீதவான் நீதிமன்றத்திடம் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குற்றப் பதிவுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவு மற்றும் காவல்துறை சுற்றுலாப் பிரிவு அதிகாரிகள் இணைந்து குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, வீட்டில் தங்கியிருந்த 22 முதல் 51 வயதுக்குட்பட்ட 8 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், அவர்களிடமிருந்து 6 கணினிகள், 39 கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தலங்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments