20.3 C
Sri Lanka
Sunday, April 19, 2026
HomeLocal Newsதடகளப் பயிற்சியின் போது மாணவன் திடீர் உயிரிழப்பு

தடகளப் பயிற்சியின் போது மாணவன் திடீர் உயிரிழப்பு

பாடசாலையில் தடகளப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 

பயிற்சியின் போது மாணவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே குறித்த மாணவன் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

உயிரிழந்தவர் 11-ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் என்பதுடன், அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments