28.7 C
Sri Lanka
Thursday, June 11, 2026
HomeLocal Newsசோலார் பேனல்களை நாளையும் நிறுத்துமாறு கோரிக்கை

சோலார் பேனல்களை நாளையும் நிறுத்துமாறு கோரிக்கை

மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, நாளையும் (31) கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய பலகங்களை (Solar Panels) செயலிழக்கச் செய்யுமாறு தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம், சூரிய பலகங்களின் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

நாளை தினத்திலும் மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை சுயமாக சூரிய பலகங்ககளை செயலிழக்கச் செய்து, கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு குறித்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments