30.6 C
Sri Lanka
Friday, April 10, 2026
HomeLocal Newsசர்வதேச கடற்பரப்பை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு

சர்வதேச கடற்பரப்பை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். 

சர்வதேச கடற்பரப்பில் நிலவும் அபாயகரமான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அமெரிக்கத் தாக்குதல்களால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பல் மற்றும் தற்போது இலங்கை கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மற்றைய ஈரானிய கப்பல் ஆகியவை தொடர்பாக பாராளுமன்றில் இன்று (5) உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

நேற்று இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில், அமெரிக்காவினால் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. 

அதன்படி, அந்த கடற்பரப்பில் தற்போது தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments