31.3 C
Sri Lanka
Thursday, June 11, 2026
HomeLocal Newsகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடை

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடை

மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சமநிலையின்மை காரணமாக, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். 

சில மணிநேரங்களுக்குள் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்றைய தினத்தில் நிலவும் மின்சாரத்திற்கான குறைந்த தேவையே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

இருப்பினும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

மின்சாரத் தேவை குறைந்துள்ள நிலையில் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய பலகங்களை (Solar Panels) இன்று (30) பிற்பகல் 3.00 மணி வரை செயலிழக்கச் செய்யுமாறு நேஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனமும் சூரிய பலகங்களின் (Solar Panels) உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments