30.6 C
Sri Lanka
Friday, April 10, 2026
HomeLocal Newsகாணாமல் போன இலங்கை மீனவர்கள் கண்டுபிடிப்பு

காணாமல் போன இலங்கை மீனவர்கள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து இந்திய கடல் எல்லைக்குள் பயணித்துள்ளது. 

இதனை அவதானித்த இந்திய மீனவர்கள் குறித்த படகினை தமது விசைப் படகால் இழுத்துச் சென்று மீனவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கை கடல் எல்லையில் விட்டு விட்டு சென்றனர். 

பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு மீண்டும் இந்திய கடல் எல்லைக்குள் சென்ற நிலையில் இன்றைய தினம் ஏழாவது நாள் தமிழ்நாட்டின் வடக்கு கரையில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments