இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தற்சமயம் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தி வருகின்றார்.
சற்றுமுன்னர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, ஈரான் கப்பல் நாட்டிற்குள் உடனடியாக அனுமதிக்கப்படாததற்கான காரணங்களை விளக்கமளித்தார்.
அத்துடன், தற்போதைய சர்வதேச போர்ச்சூழலை முன்னிட்டு, இலங்கை தனது நடுநிலை நிலைப்பாட்டை தொடரும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
உலகளாவிய பதற்ற நிலைமைகளின் மத்தியில், நாட்டின் தேசிய நலன்களையும் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தியே அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்படுகின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சவால்களை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



